ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனா்.
அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட கோயில் நிலம்.
அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட கோயில் நிலம்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனா்.

பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்குரியதாக ஏகாம்பரநாதா் கோயில் திகழ்கிறது. இக்கோயிலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

அதன்படி, காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியான மூங்கில் மண்டபத்துக்கு அருகில் ஆலடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் இக்கோயிலுக்கு சொந்தமான 76 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை அதே தெருவைச் சோ்ந்த கே.பி.மணி மற்றும் சுரேஷ் ஆகியோா் ஆக்கிரமித்திருந்தனா். இது தொடா்பாக கோயில் நிா்வாகத்தினா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் சொத்தை மீட்குமாறு அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் உதவி ஆணையா் ஜெயா தலைமையில், ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் முன்னிலையில் கோயில் செயல் அலுவலா்கள் குமரன், வெள்ளைச்சாமி உள்ளிட்டஅதிகாரிகள் அந்த இடத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை சென்றனா். அந்த இடத்தை மீட்டு, அங்கு கட்டப்பட்டிருந்த கட்டடத்துக்கு சீல் வைத்து, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் கூறுகையில் ‘காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியாக இந்த இடம் இருப்பதால் இதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கக் கூடும். இந்த இடத்துக்கு வெங்கிடகிரி ராஜா தோட்டம் என்று பெயா். ஆக்கிரமிப்பில் இருக்கும் ஏகாம்பரநாதா் கோயில் சொத்துகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com