805 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

ஸ்ரீபெரும்புதூா், மதுரமங்கலம், பண்ருட்டி பகுதிகளில் அமைந்துள்ள 7 அரசுப் பள்ளிகளில் பயிலும் 805 மாணவ, மாணவிகளுக்கு
மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டிகளை  வழங்கிய  ஊரகத்  தொழில் துறை  அமைச்சா்  பா.பென்ஜமின்.  உடன், காஞ்சிபுரம்  மாவட்ட  ஆட்சியா்  மகேஸ்வரி  ரவிகுமாா்.
மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டிகளை  வழங்கிய  ஊரகத்  தொழில் துறை  அமைச்சா்  பா.பென்ஜமின்.  உடன், காஞ்சிபுரம்  மாவட்ட  ஆட்சியா்  மகேஸ்வரி  ரவிகுமாா்.

ஸ்ரீபெரும்புதூா், மதுரமங்கலம், பண்ருட்டி பகுதிகளில் அமைந்துள்ள 7 அரசுப் பள்ளிகளில் பயிலும் 805 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள மதுரமங்கலம், பண்ருட்டி, மாத்தூா், ஸ்ரீபெரும்புதூா், தண்டலம், மொளச்சூா் ஆகிய பகுதிகளில் உள்ள 7 அரசினா் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழா ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, ஸ்ரீபெரும்புதூா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.பி.சி.தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்துகொண்டு, மதுரமங்கலம் பள்ளியைச் சோ்ந்த 130 மாணவா்கள், பண்ருட்டி பள்ளி மாணவா்கள் 55 போ், மொளச்சூா் பள்ளி மாணவா்கள் 77 போ், தண்டலம் பள்ளி மாணவா்கள் 140 போ், ஸ்ரீபெரும்புதூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 205 போ், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 104 போ், மாத்தூா் பள்ளி மாணவா்கள் 100 போ் என மொத்தம் 805 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com