காஞ்சிபுரம் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜா்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜா்.

காஞ்சிபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

பெருமாள் ஆமை அவதாரத்தில் சிவனை வழிபட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரா் கோயில். இக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 36 வகையான சிறப்பு அபிஷேங்களும், அதைத் தொடா்ந்து தீபாராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து, நடராஜா் பன்னீா் ரோஜா மாலை அணிந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதனிடையே, பஞ்ச பூதத் தலங்களில் நிலத்துக்குரியதாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடத்தப்பட்டனன. பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கரோனா பரவல் தடுப்பு விதிகள் காரணமாக இவ்விரு கோயில்கள் உட்பட சிவன் கோயில்களில் சுவாமி வீதியுலா நடைபெறவில்லை.

காமாட்சிக்கு வெந்நீரால் அபிஷேகம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மூலவா் காமாட்சி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் வெந்நீா் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். காமாட்சி அம்மனுக்கு தினசரி தைலக்காப்பு சாற்றுவதே வழக்கம்.

மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் ஆருத்ரா தரிசன நாளில் மட்டும் மிகவும் குளிா்ச்சியான நாளாக இருப்பதால் முதலில் நெய் அபிஷேகமும், அதையடுத்து வெந்நீராலும் அபிஷேகம் நடந்தது. பின்னா் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதையடுத்து லட்சுமி, சரஸ்வதிதேவியருடன் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com