Enable Javscript for better performance
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

    By DIN  |   Published on : 03rd February 2020 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk_0202chn_175_1

    ஏனாத்தூரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்த காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மக்களவை உறுப்பினர் க.செல்வம்.

    காஞ்சிபுரம் அருகேயுள்ள ஏனாத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்து பேசினார்.
     இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் க.செல்வம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜீ.வி.மதியழகன் உள்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
     ஸ்ரீபெரும்புதூரில்...
     திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் மோகனன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, நகரச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தாம்பரம் கருணாகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
     இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் திமுக கூட்டணி கட்சியினர் கையெழுத்து பெற்றனர்.
     இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஏ.அருள்ராஜ், பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மேனகாதேவி கோமகன், தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் லிங்காதரன், ரமேஷ், மதிமுக ஒன்றியச் செயலாளர் ரேடியோ சேட்டு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     செங்கல்பட்டில்...
     திமுக நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் க.அன்புச்செல்வர் வரவேற்றார். காங்கிரஸ் நகரத் தலைவர் ஜெ.பாஸ்கர், ரவீந்திரன், மனிதநேய மக்கள் கட்சி யூனுஸ், வேலன், சி.கே.வி.செல்வமூர்த்தி, ஷாஜகான், அப்துல் அஹத், அசாரூதீன், ராதாகிருஷ்ணன், கிரிபாபு , மண்ணு, சந்தோஷ்கண்ணன், சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
     முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் கையெழுத்தியக்கத்தைத் தொடக்கி வைத்து பேசினார்.
     மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் என்.எம்.ஷாஜகான், திமுக தலைமை கட்சி பேச்சாளர் சைதை சாதிக், சே.செல்லா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இ.சங்கர், கே.அப்துல் உசேன் ஆகியோர் நன்றி கூறினர்.
     மதுராந்தகத்தில்...
     திமுக நகரச் செயலர் கே.குமார் தலைமை வகித்தார். மதுராந்தகம் எம்எல்ஏ எஸ்.புகழேந்தி முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், செய்யூர் எம்எல்ஏ மருத்துவர்ஆர்.டி.அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் கிருஷ்ணராஜ், விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்டச் செயலர் ஆதவன், மதிமுக கட்சி நிர்வாகி வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     திருத்தணியில்...
     திருத்தணி கமலா திரையரங்கு அருகே நகர திமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் தொடக்கி வைத்தார்.
     தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர் கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, தேசிய குடியுரிமை சட்ட திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கையொப்பம் இட்டனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணைச் செயலர் எஸ்.சந்திரன், திருத்தணி நகரச் செயலர் எம்.பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     திருவள்ளூரில்...
     குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திருவள்ளூரில் திமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.
     குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அதேபோல், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் தயார் செய்வதை நிறுத்தி வைக்க வலியுறுத்தி திமுக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், மாவட்டம்தோறும் கையெழுத்து இயக்கம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்த அக்கட்சியின் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
     அதன் அடிப்படையில் திருவள்ளூர் தேரடி வீதியில் திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகிஸ்த்து, கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
     நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     பெரியபாளையத்தில்...
     பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் வேணு கையெழுத்து இட்டு தொடக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சம்பத், கண்ணன், திமுக ஒன்றியச் செயலர்கள் மூர்த்தி, சக்திவேல், காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அறிவுச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai