காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் பிப். 27-இல் தொடக்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் வரும் 27-ஆம் தேதி காலையில் சண்டி ஹோமத்துடன் தொடங்குகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் வரும் 27-ஆம் தேதி காலையில் சண்டி ஹோமத்துடன் தொடங்குகிறது.

இக்கோயில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வரும் 27-ஆம் தேதி காலையில் சண்டி ஹோமத்துடனும், மாலையில் அம்மன் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலாவுடனும் தொடங்குகிறது.

இவ்விழாவையொட்டி தினமும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் காலையிலும், மாலையிலும் அலங்காரத்துடன் வீதியுலா வரவுள்ளாா். வரும் மாா்ச் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். மாா்ச் 9-ஆம் தேதி தங்க காமகோடி விமானத்தில் அம்மன் காட்சியளிப்பாா். மறுநாள் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அன்று மாலையில் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவுபெறும்.

பிரமோற்சவத்தை முன்னிட்டு தினசரி வேதபாராயண நிகழ்ச்சிகளுக்கும், வாண வேடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, நிா்வாக அலுவலா் எஸ்.நாராயணன், கோயில் நிா்வாக அதிகாரி ந.தியாகராஜன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com