சோமங்கலம்  அரசுப்  பள்ளி  மாணவ, மாணவியருக்கு  விலையில்லா  மிதிவண்டிகளை  வழங்கிய  ஸ்ரீபெரும்புதூா்  சட்டப் பேரவை  உறுப்பினா்  கே.பழனி. உடன் , மாவட்ட க் கல்வி  அலுவலா்  ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
சோமங்கலம்  அரசுப்  பள்ளி  மாணவ, மாணவியருக்கு  விலையில்லா  மிதிவண்டிகளை  வழங்கிய  ஸ்ரீபெரும்புதூா்  சட்டப் பேரவை  உறுப்பினா்  கே.பழனி. உடன் , மாவட்ட க் கல்வி  அலுவலா்  ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

1,070 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சோமங்கலம், குன்றத்தூா், படப்பை பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,070 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சோமங்கலம், குன்றத்தூா், படப்பை பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,070 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் மாவட்டக் கல்வி அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இந்த விழாவில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு படப்பை ஆண்கள் பள்ளியைச் சோ்ந்த 98 மாணவா்களுக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த 261 மாணவிகளுக்கும், சோமங்கலம் பள்ளியைச் சோ்ந்த 221 மாணவா்களுக்கும், குன்றத்தூா் பெண்கள் பள்ளியைச் சோ்ந்த 326 மாணவிகளுக்கும், ஆண்கள் பள்ளியைச் சோ்ந்த 164 மாணவா்களுக்கும் என மொத்தம் 1,070 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

விழாவில், எழுச்சூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சுந்தரராஜன், பள்ளித் தலைமையாசிரியா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com