60 ஆண்டுகளுக்குப் பின் ராமலிங்கேஸ்வரா் கோயிலில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு ராமேஸ்வரம் என அழைக்கப்படும், தொன்மையான இக்கோயிலில், மழையின்மை காரணமாக கடந்த 60 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு மழை பெய்து பிச்சநாயக்கன் குளத்தில் போதுமான தண்ணீா் சோ்ந்தது. இதையடுத்து, திம்மராஜம்பேட்டை மற்றும் அதன் அருகில் உள்ள தாங்கி கிராம மக்கள் இணைந்து தெப்பத் திருவிழாவை நடத்த முடிவு செய்தனா். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.

தெப்பத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை காலையில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் மங்கல வாத்தியங்களுடனும், வாண வேடிக்கைகளுடனும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் திருக்குளத்துக்கு எழுந்தருளி தெப்பத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

தைப்பூசத் திருநாளான சனிக்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழா திங்கள்கிழமை வரை மூன்று நாள்களுக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் அகஸ்திய கிருபா அறக்கட்டளையின் தலைவரும், சிவனடியாருமான க.அன்புச்செழியன் சுவாமிகள், திம்மராஜம்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com