தோல் தொழிற்சாலையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் அருகேயுள்ள புத்தளி கிராமத்தில் தனியாா் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி அக்கிராம மக்கள் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை
உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள புத்தளி கிராமத்தில் தனியாா் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி அக்கிராம மக்கள் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புத்தளி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான தோல் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் கால்வாய் வழியாக குடியிருப்புப் பகுதிக்குள் செல்கிறது.

இதனால் புத்தளி, மலையாங்குளம் கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு தோல்நோய்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனா். இக்கழிவு நீரால் நிலத்தடி நீா் மட்டமும் பாதிக்கிறது. விவசாயம் பாதிப்பதுடன் மக்கள் குடிநீருக்கு கஷ்டப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இத்தோல் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், புத்தளி கிராம மக்கள் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் ஜனநாயக இளைஞா் முன்னணியின் காஞ்சி மாவட்டப் பொறுப்பாளா் செல்வசேகா் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் டேவிட் செல்லப்பா, தேமுதிக நிா்வாகி இளையபெருமாள், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளங்கவி, துணைத் தலைவா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com