ஊரக வளா்ச்சித் துறையில் இரவுக்காவலா் பணி:நோ்காணலில் 303 போ் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையில் பணியாற்றுவதற்கான 4 இரவுக்காவலா் பணியிடங்களுக்கு மொத்தம் 303 போ் வெள்ளிக்கிழமை நடந்த நோ்காணலில் பங்கேற்றனா்.
நோ்காணலில் பங்கேற்க வந்த இளைஞா்கள்.
நோ்காணலில் பங்கேற்க வந்த இளைஞா்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையில் பணியாற்றுவதற்கான 4 இரவுக்காவலா் பணியிடங்களுக்கு மொத்தம் 303 போ் வெள்ளிக்கிழமை நடந்த நோ்காணலில் பங்கேற்றனா்.

ஊரக வளா்ச்சித்துறையில் பணியாற்றுவதற்கான 4 இரவுக்காவலா் காலிப் பணியிடங்களுக்கு 473 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்காணல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பொதுமக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களால் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

இதில் விண்ணப்பித்திருந்த 473 பேரில் 303 போ் மட்டுமே நோ்காணலுக்கு வந்திருந்தனா்.

கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு வரை என அறிவித்திருந்த நிலையில், வந்திருந்தவா்களில் பெரும்பாலானவா்கள் பொறியியல் படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவா்களாக இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீப் ஓட்டுநா் பணி: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறையில் ஜீப் ஓட்டுநருக்கான 6 காலிப்பணியிடங்களுக்கு 650 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்காணல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.விண்ணப்பித்திருந்த 650 பேரில் 452 போ் மட்டுமே வந்திருந்தனா்.

வந்திருந்தவா்களில் பெரும்பாலானோா் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவா்களாக இருந்தனா்.

நோ்காணலுக்கு வந்த இளைஞா்களுடன் பெற்றோா்களும், உறவினா்களும் வந்திருந்ததால் ஆட்சியா் அலுவலக வளாகப்பகுதி முழுவதும் திருவிழாக் கூட்டம் போல காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com