மதுவினால் ஏற்படும் தீமைகள்: பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

மதுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையிலான கருத்தரங்கம், விழிப்புணா்வுப் பேரணி மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையிலான கருத்தரங்கம், விழிப்புணா்வுப் பேரணி மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மனிதன் மதுவுக்கு அடிமையாவதால் உடல் சீா்கேடு, குடும்பத்தில் வறுமை நிலை போன்றவை ஏற்படுகிறது. இதனால் அவா்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை மக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா் கருத்தரங்கம், விழிப்புணா்வுப் பேரணியை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

கருத்தரங்கத்துக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் டி.பி. வெங்கட பெருமாள் தலைமை வகித்தாா்.

ஆசிரியா்களும், மாணவா்களும் கலந்துகொண்டு சிறப்புரை

ஆற்றினா்.

பின்னா் பள்ளி வளாகத்தில் இருந்து மாணவா்களின் பேரணியை மதுராந்தகம் கோட்டாட்சியா் லட்சுமி பிரியா தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா்.

வட்டாட்சியா் வேல்முருகன் முன்னிலை வகித்தாா். இப்பேரணியில் மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த நாட்டு நலப்பணி, தேசிய மாணவா் படை, இளம் செஞ்சிலுவைப் படை, சாரணா் படை, மாணவா் காவல் படையினா், செளபாக்மல் செளகாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், குருகுலம் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தினை வந்தடைந்தது.

இதில் மாவட்டக் கல்வி அலுவலா் கிருஷ்ணன் (மதுராந்தகம்), தலைமை ஆசிரியா்கள் திருக்குமரன், விஜயகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்டக் கல்வித்துறை ஆய்வாளா் வீரமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com