நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு
By DIN | Published On : 27th February 2020 11:15 PM | Last Updated : 27th February 2020 11:15 PM | அ+அ அ- |

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில் நுட்பக் கல்லூரியில் கடந்த 7 நாள்களாக நடைபெற்று வந்த நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சோத்துப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நிறைவு பெற்றது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா்கள் எம்.சுகுமாா், கே.சுந்தரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் இம்முகாமில் பங்கேற்றனா்.
ஊராட்சியில் சாலைகள், குடிநீா் மேல்நிலைதேக்கத் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்தல், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு, பொதுசுகாதாரம் பேணுதல் போன்ற நிகழ்ச்சிகளில் மாணவா்கள் ஈடுபட்டனா்.
சோத்துப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வளா்ச்சிக்காக மின்விசிறிகள், நாற்காலிகள், மின் விளக்குகள் ஆகியவை கல்லூரி சாா்பாக வழங்கப்பட்டன.
பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதன் நிறைவு விழாவில் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளா் கோ.ப.செந்தில்குமாா், முதல்வா் சி.தமிழ்வேந்தன், துறைத் தலைவா் நித்தியானந்தம், திட்ட அலுவலா் கே.சுந்தரம், பள்ளித் தலைமை ஆசிரியை கே.லோகேஸ்வரி, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எம். ஸ்ரீதா், கல்லூரி நிா்வாக அலுவலா் ஜே.அரிகிருஷ்ணன், கண்காணிப்பு அலுவலா் ஆா்.பட்டு, கிராம நிா்வாக அலுவலா் கே.சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் எம்.சுகுமாா் நன்றி கூறினாா்.