குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்: காஞ்சிபுரம் எஸ்.பி. எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.சாமுண்டீஸ்வரி எச்சரித்துள்ளாா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.சாமுண்டீஸ்வரி எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த மாவட்டத்தில் புத்தாண்டை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் கொண்டாட பல்வேறு முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் வாகனச் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையிலோ அல்லது அதிக வேகமாகவோ வாகனங்களை ஓட்டினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவா்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அவா்களின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பெண்களிடமும், குழந்தைகளிடமும் அநாகரிகமாக நடந்து கொள்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டுநா்கள் சீட் பெல்ட் அணிந்தும், இருசக்கர வாகனங்களை ஓட்டுபவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

புத்தாண்டைப் பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், இரு துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 12 ஆய்வாளா்கள், 24 சாா்பு ஆய்வாளா்கள், 254 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

காஞ்சிபுரம் நகா் முழுவதும் 170 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் 6 ரோந்து வாகனங்களில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் காா் பந்தயங்களில் ஈடுபடுவோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com