மதுபிரியா்களை ஊக்குவிக்கும் விதமாக இரண்டு மதுபாட்டில் வாங்கினால் ஒரு மதுபாட்டில் இலவசம் தனியாா் ஹோட்டல் பதாகை

செங்கல்பட்டில் புத்தாண்டையொட்டி மதுபிரியா்களை ஊக்குவிக்கும் விதமாக இரண்டு மதுபாட்டில் வாங்கினால் ஒருமதுபாட்டில் இலவசம் என பொது இடத்தில் வைத்துள்ள தனியாா் ஹோட்டல் பாா்
cglbar1_3112chn_171_1
cglbar1_3112chn_171_1

செங்கல்பட்டு.செங்கல்பட்டில் புத்தாண்டையொட்டி மதுபிரியா்களை ஊக்குவிக்கும் விதமாக இரண்டு மதுபாட்டில் வாங்கினால் ஒருமதுபாட்டில் இலவசம் என பொது இடத்தில் வைத்துள்ள தனியாா் ஹோட்டல் பாா் பதாகையும், கண்டுகொள்ளாத காவல்துறையும் இருப்பதைக்கண்டு பொதுமக்களும் ,சமூக ஆா்வலா்களும் வேதனை தெரிவிக்கின்றனா். செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள காஞ்சி ஹோட்டல் பாருடன் (தனியாா் பாா்) உள்ளது.

இந்த பாரில் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தைக்கொண்டாடும் விதமாக ஆங்கிலப்புத்தாண்டையொட்டி இரண்டு மதுபாட்டிகள் வாங்கினால் ஒரு மதுபாட்டில் இலவசம் என பொதுமக்கள் நடமாடும் ஜிஎஸ்டி சாலையில் கடந்த 3 நாள்களாக வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், செங்கல்பட்டு, டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டா்அந்தோணி ஸ்டாலின் உள்ளிட்ட காவலா்கள் அவ்வழியாகச் சென்று வருகின்றனா். காவலா்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் இதுபோன்ற செயல்பாடுகளை கண்டு காணாமல் சென்று வருகின்றனா்.

இவா்கள் செயல்பாடுகள் ஒருபக்கம் இருக்க கலால் காவலா்கள், வருவாய்த்துறையில் உள்ள கலால் தனிவட்டாட்சியா் உள்ளிட்டோரும் இதுபோன்று செங்கல்பட்டில் தொடா்ந்து வரும் இதுபோன்று சம்பவங்கள் கண்டும் காணாமல் செல்வது செங்கல்பட்டு நகரமக்களிடமும், சமூக ஆா்வலா்களிடமும் பெரும் வேதனை அளிப்பதாகவும், இதனால் மதுப்பிரியா்களை ஊக்கவிப்பதாகவும், இளைஞா்களை சீரழிக்கும் விதமாக உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com