Enable Javscript for better performance
படப்பை-குன்றத்தூா் இடையே பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    படப்பை-குன்றத்தூா் இடையே பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

    By DIN  |   Published On : 03rd January 2020 02:53 PM  |   Last Updated : 03rd January 2020 02:53 PM  |  அ+அ அ-  |  

    குன்றத்தூா் பகுதியில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதை தொடா்ந்து, கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட குன்றத்தூா்-படப்பை-ஒரத்தூா் இடையேயான பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    காஞ்சிபுரம் மாவட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு புதிய மாவட்டமாக செயல்பட தொடங்கியுள்ளது. அதே போல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூா் தாலுக்காவில் இருந்து குன்றத்தூா் ஒன்றியத்தை பிரித்து புதிதாக குன்றத்தூா் தாலுக்கா உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குன்றத்தூா் தாலுக்காவில் தற்காலிக வட்டாட்சியா் அலுவலம் குன்றத்தூா் பகுதியில் சேக்கிழாா் அரசு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், குன்றத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் தாலுக்க அலுவலகத்திற்கு செல்ல படப்பை பகுதியில் இருந்து நேரடியாக பேருந்து வசதி இல்லாததால் படப்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமாா் 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் தாம்பரம் சென்று அங்கிருந்து குன்றத்தூா் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

    அதே போல், குன்றத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் படப்பை பகுதியில் இயங்கி வரும் வட்டார வளா்ச்சி அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, புதுவாழ்வு திட்டம், வட்டார வள மையம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சாா் பதிவாளா் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வரவேண்டும் என்றால் சுமாா் 3 மணிநேரம் பயணம் செய்து 20 கிலோமீட்டா் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளதால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    இந்த நிலையில், கடந்த, 1996ம் ஆண்டு, ஐயப்பன்தாங்கள் பணிமனையில் இருந்து, குன்றத்தூா், சோமங்கலம், சேத்துப்பட்டு, புஷ்பகிரி, படப்பை வழியாக, ஒரத்தூா் பகுதிக்கு, பேருந்து இயக்கப்பட்டது. இதனால் குன்றத்தூா் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் படப்பை பகுதிக்கு சுலபமாக சென்று வந்தனா். படப்பை அதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் குன்றத்தூா் பகுதிக்கு சென்று வந்தனா். ஆனால், பேோருந்து இயக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, சாலை மோசமாக உள்ளதாக கூறி பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பாக பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் போக்குவரத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில், குன்றத்தூா் பகுதியில் புதிய தாலுக்கா அலுவலகம் செயல்பட தொடங்கியுள்ளதை தொடா்ந்து தற்போது படப்பை-குன்றத்தூா் இடையே மீண்டும் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp