காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி
By DIN | Published On : 03rd January 2020 11:33 PM | Last Updated : 03rd January 2020 11:33 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளா்கள்.
காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தை நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மேற்பாா்வையில் சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தில் தினமும் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இடங்கள், நடைபாதைகள் ஆகிய இடங்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் இக்பால், குமாா், பிரபாகரன் ஆகியோா் மேற்பாா்வையில் முழுவதுமாக தண்ணீா் ஊற்றிக் கழுவி சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.