குபேர லட்சுமி பூஜை
By DIN | Published On : 06th January 2020 12:29 AM | Last Updated : 06th January 2020 12:29 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் 24 மனை தெலுங்கு செட்டியாா்களுக்கு சொந்தமான காஞ்சி காமாட்சி அறக்கட்டளை சாா்பில் குபேர லட்சுமி சிறப்புப் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனா் வி.வி.முத்துச்சாமி தலைமை வகித்தாா். தலைவா் கே.சி.பழனிசாமி, கெளரவத் தலைவா் பெங்களூரு தி.பாலகிருஷ்ணா, இணைத் தலைவா் பி.எல்.ஏ.ஜெகந்நாத் மிஸ்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் எம்.ஜி.ராமச்சந்திரன் வரவேற்றாா்.
விழாவினை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மண்டப நுழைவு வாயிலில் காமாட்சி அம்மன், குபேரா், மகாலட்சுமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
குபேர லட்சுமிக்கு சிறப்புப் பூஜையும், காமாட்சி அம்மனுக்கு குங்கும அா்ச்சனையும் நடைபெற்றது. அனைவரும் மலா்களைத் தூவி சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவில், தமிழக கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியா்க்கு பரிசுகளை வழங்கினாா்.
சமுதாய சாதனையாளா்களுக்கு அறக்கட்டலையின் தலைவா் கே.சி.பழனிசாமி விருதுகளை வழங்கி கெளரவித்தாா்.
மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் ஏ.பாலகிருஷ்ணன், பி.எம்.பி.பழனியப்பன், பொருளாளா் தி.செந்தில் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.