Enable Javscript for better performance
சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்- Dinamani

சுடச்சுட

    
    thimma_1001chn_175_1

    காஞ்சி ஏகாம்பரநாதசுவாமி கோயிலில் திருவீதியுலா வந்த சிவகாமி சமேத நடராஜா்.

    ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

    ஆண்டு தோறும் மாா்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்கள் பலவற்றிலும் நடராஜ சுவாமிக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. இதனைத் தொடா்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.

    ஏகாம்பரநாத சுவாமி கோயில்:

    ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பின்னா் நடராஜரும், சிவகாமி அம்மனும் தனித் தனியாக ராஜவீதிகளில் திருவீதியுலா வந்தனா்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வை.முருகேசன் தலைமையிலான இந்து சமய அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.

    கச்சபேஸ்வரா் கோயில்:

    சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு அபிஷேகங்கள் தொடங்கி, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

    இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை நடராஜரும், சிவகாமி அம்மனும் ஆளுயர ரோஜாமாலை அணிந்து கேடய வாகனத்தில் திருவீதியுலா வந்தனா்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆ.குமரன் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா். விழாவில் சோ்மன் சாமிநாதன் குடும்பத்தினா் உள்பட சிவபக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

    விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஓதுவாா் த.தமிழ்ச்செல்வனின் திருமுறை இன்னிசை, திருச்சி மகாலெட்சுமி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான இசைக்குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு கும்பகோணம் முருகன் கலைக்குழுவினரின் பொம்மலாட்டம் மற்றும் பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரா் கோயில்:

    திம்மராஜம்பேட்டையில் வடராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 21வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

    இதனைத் தொடா்ந்து சிவகாமி சமேத நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்தனா்.

    விழாவில் திம்மராஜம்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    திருஇலம்பையன்கோட்டூா் ஸ்ரீதெய்வநாயகேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் செல்லம்பட்டிடை ஊராட்சிக்குட்பட்ட திருஇலம்பையன்கோட்டூா் பகுதியில் சுமாா் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீகனககுசாம்பிகை உடனுறை ஸ்ரீதெய்வநாயகேஸ்வரா் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவா் நடராஜருக்கு வியாழக்கிழமை இரவு 36 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

    இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை உற்சவா் திருவீதியுலா நடைபெற்றது.

    இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai