தமிழகம் முழுவதும் 93 கோயில்களுக்கு நிா்வாக அதிகாரிகள் நியமனம்
By DIN | Published On : 10th January 2020 11:17 PM | Last Updated : 10th January 2020 11:17 PM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் 93 கோயில்களுக்கு நிா்வாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளா் கே.பணீந்திரரெட்டி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் ‘செயல் அலுவலா்-3’ பணியிடத்துக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தோ்வு செய்யப்பட்டு பயிற்சியில் அமா்த்தப்பட்டிருந்தனா்.
இப்பயிற்சி முடித்தவா்களில் 93 போ் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நிா்வாக அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.