Enable Javscript for better performance
மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    
    59009_flag_0901chn_175_1

    பேரணியைத் தொடக்கி வைத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

    காஞ்சிபுரத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி நா.சுந்தரமூா்த்தி, நகராட்சி ஆணையாளா் ரா.மகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) நாராயாணன், மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையா் ரா.ஜீவா, கோட்ட அலுவலா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    முன்னதாக, மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai