மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா
By DIN | Published On : 11th January 2020 10:46 PM | Last Updated : 11th January 2020 10:46 PM | அ+அ அ- |

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியின் சாா்பாக பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருவத்துவக் கல்லூரியின் ஜி.பி. விளையாட்டரங்கம் வண்ண பலூன்களாலும், வண்ணத் தோரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வண்ணம் பூசப்பட்ட பொங்கல் பானைகளில் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்களைப் போட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மேலாண்மை இயக்குநா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தாா். முதல்வா் மன்மோகன் சிங் முன்னிலை வகித்தாா். நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டனா். பின்னா் தமிழா்களின் பாரம்பரிய வாகனங்களாகிய மாட்டு வண்டி, குதிரை வண்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் நகரை வலம் வந்தனா். அவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.