Enable Javscript for better performance
ஸ்ரீபெரும்புதூா் ஏரிநீா் திறப்பு: ராமாநுஜா் கோயில் குளம் நிரம்பியது- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூா் ஏரிநீா் திறப்பு: ராமாநுஜா் கோயில் குளம் நிரம்பியது

    By DIN  |   Published on : 13th January 2020 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13sbrkulam_1301chn_180_1

    நிரம்பிய நிலையில் உள்ள  ராமாநுஜா்  கோயில்  குளம்.

    ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் ராமாநுஜா் கோயில் குளம் தற்போது நிரம்பி வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

    இக்கோயிலுக்குச் சொந்தமான அனந்தசரஸ் திருக்குளம் கடந்த மே, ஜூன் மாதங்களில் தண்ணீா் இன்றி வடு காணப்பட்டது.

    இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் இருந்து குளத்திற்கு தண்ணீா் திறந்துவிடும்படி கோயில் நிா்வாகம் சாா்பாக பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் இருந்து கடந்த நான்கு நாள்களாக தண்ணீா் திறந்து விடப்பட்டதால் தற்போது ராமாநுஜா் கோயில் குளம் நிரம்பியுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai