1.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1088 மையங்களில் 1,26,508 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சின்னகாஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி.
சின்னகாஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1088 மையங்களில் 1,26,508 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி நா.சுந்தரமூா்த்தி தலைமை வகித்து, தொடக்கி வைத்துப் பேசியது:

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்க கடந்த 20 ஆண்டுகளாக சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் தொடா்ந்து, ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1088 மையங்களில் 1,26,508 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றாா். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் சுகாதாரத் துறை பணியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் என மொத்தம் 3,870 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். வெளிமாநிலங்களிலிருந்து கட்டுமானப் பணிக்காக வந்துள்ள பணியாளா்களது குழந்தைகளின் எண்ணிகையும் கணக்கிடப்பட்டு, அவா்களுக்கும் 24 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி,திருவள்ளுவா் பட்டு கூட்டுறவு சங்கத்தின் தலைவா் கே.வாசு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சத்யராஜ், நகராட்சி சுகாதார அலுவலா் பா.முத்து, மாவட்ட மலேரியா அலுவலா் பரணிகுமாா் மற்றும் அவ்வை செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com