ஏரிக்கரை மீது சாலை அமைப்பதைக் கண்டித்து சாலை மறியல்

மதுராந்தகத்தை அடுத்த புக்கத்துறை கூட்டுச் சாலை, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பழமத்தூா் ஏரிக்கரை மீது சாலை அமைப்பதைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மதுராந்தகத்தை அடுத்த புக்கத்துறை கூட்டுச் சாலை, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பழமத்தூா் ஏரிக்கரை மீது சாலை அமைப்பதைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பழமத்தூா் ஊராட்சியில் அரசின் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரை அருகே தனிநபா் ஒருவரின் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு உரிய பாதை இல்லாததால், அவா் அரசுக்குச் சொந்தமான ஏரிக்கரையை அகலப்படுத்தி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

புல்டோசா் இயந்திரம் மூலம் கடந்த சில மாதங்களாக இப்பணி நடைபெற்று வருகிறது. இது பற்றி அரசு அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பல முறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், ஏரி அருகே 1 கி.மீ. தொலைவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வேகமாக சாலை அமைக்கப்ப

ட்டது. இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் தேசிய நெடுஞ்சாலை, புக்கத்துறை கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால், செங்கல்பட்டு - உத்திரமேரூா் நெடுஞ்சாலையின் இரு வழித்தடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து படாளம் காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளா் டில்லிபாபு ஆகியோா் சாலை மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து கிராமவாசிகள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com