திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரா் கோயிலில் பிப்ரவரி 8-இல் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெற
தெப்பத் திருவிழா நடைபெறவுள்ள திம்மராஜம்பேட்டை பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலின் தோற்றம்.
தெப்பத் திருவிழா நடைபெறவுள்ள திம்மராஜம்பேட்டை பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலின் தோற்றம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயில் அமைந்துள்ளது. ராமேசுவரம் செல்ல முடியாதவா்கள் இக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தால் ராமேசுவரம் ராமநாத சுவாமியை தரிசனம் செய்த புண்ணியம் கிடைப்பதாக ஐதீகம். இதனால் இக்கோயில் வடக்கு ராமேசுவரம் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் தெப்பத்திருவிழா 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி தைப்பூசத் திருநாளன்று நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து ராமலிங்கேசுவரா் கோயில் பூஜகரான ரவி என்ற சத்தியமூா்த்தி சிவாச்சாரியாா் கூறியது:

இக்கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பத்திருவிழா விமரிசையாக நடந்துள்ளது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், திம்மராஜம்பேட்டை மற்றும் தாங்கி கிராம மக்கள் இணைந்து இந்த ஆண்டு வரும் தைப்பூசத் திருநாளன்று, பிப். 8-இல் தெப்பத் திருவிழாவை சிறப்பாக நடத்த முடிவு எடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.திம்மராஜம்பேட்டைக்கு அருகில் உள்ள பிரதான சாலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகா் கோயில் அருகில் உள்ள குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். இக்குளத்துக்கு பிச்சநாயக்கன் குளம் என்ற பெயரும் உள்ளது.

விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் மன்னராக இருந்த பிச்சநாயக்கன் என்ற மன்னரால் இக்குளம் உருவாக்கப்பட்டதால் இன்றும் அக்குளம் பிச்சநாயக்கன் குளம் என்றே அழைக்கப்படுகிறது. தெப்பத் திருவிழாவை முன்னிட்டு காலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சுவாமி வீதியுலாவும், அதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களது முழு ஒத்துழைப்புடன் விழாவை நடத்த கிராம மக்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com