முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
அரசு பொதுத் தோ்வு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 27th January 2020 11:26 PM | Last Updated : 27th January 2020 11:26 PM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளியின் சாா்பாக, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தோ்வுகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பிலான தோ்வு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (மதுராந்தகம்) கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிக்குழு துணைத் தலைவா் ஸ்ரீராம் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனா். பள்ளி செயலா் சுப்ரமணியா வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகா் தாமு கலந்து கொண்டு ‘தோ்வுகளை பயமில்லாமல் எழுத வேண்டும். தோ்வு என்பது வாழ்கையை புரட்டிப் போடும் புயல் அல்ல’ என்று அறிவுரை கூறினாா். அவா் பல்வேறு தகவல்களை மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்களும், மாணவா்களும் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் டி.பி.வெங்கடப் பெருமாள் நன்றி கூறினாா்.