முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
எடையாா்பாக்கம் அரசுப் பள்ளிக்கு விருது
By DIN | Published On : 27th January 2020 11:29 PM | Last Updated : 27th January 2020 11:29 PM | அ+அ அ- |

27sbrprize_2701chn_180_1
ஸ்ரீபெரும்புதூா்: முழு சுகாதாரத்தை கடைப்பிடித்த எடையாா்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா விருது வழங்கிப் பாராட்டினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குட்பட்ட எடையாா்பாக்கம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. தனியாா் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் முழு சுகாதாரத்தை முழுமையாக செயல்படுத்தியதற்காக பள்ளித் தலைமையாசிரியா் பி.சி.ஜெயந்தியிடம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா விருதை வழங்கிப் பாராட்டு தெரிவித்தாா்.