முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
சாலை விபத்தில் சிறுவன் பலி
By DIN | Published On : 27th January 2020 10:33 AM | Last Updated : 27th January 2020 10:33 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவளூா்குப்பம் பகுதியில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் பலியானாா்.
காஞ்சிபுரத்தை அடுத்த காரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏகாம்பரம். அவரது மகன் சந்தோஷ் (15) எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா். சந்தோஷ், அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ், மாதவன் ஆகியோருடன் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூா் குப்பம் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றாா்.
வேலை முடிந்து மூவரும் மேவளூா்குப்பம் பேரம்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது சாலைத் தடுப்பில் அவா்களது வாகனம் மோதியதில் மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா்.
இவ்விபத்தில் காயமடைந்த மூவரும் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.