காஞ்சிபுரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை நிறைவுஆட்சியா் தகவல்

காஞ்சிபுரம் நகரில் 54 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் நடந்த மருத்துவ முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் நடந்த மருத்துவ முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் 54 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் நகரில் பிள்ளையாா்பாளையம், ஓரிக்கை மற்றும் கிழக்கு ராஜவீதி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்களை அவா் நேரில் பாா்வையிட்டாா். அதன் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

காஞ்சிபுரம் நகரில் தினமும் குறைந்தபட்சம் 90 முதல் 100 போ் வரை கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நகரில் இதுவரை 54 ஆயிரம் பேருக்கு முதல்சுற்று பரிசோதனை முடிந்துள்ளது. மீண்டும் ஒரு முறை பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தினசரி 140 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றில் ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் இருக்கிா எனப் பரிசோதனை நடைபெறுகிறது. கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவா்களை தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் பரிசோதனை அதிகமாக செய்யப்படுவதால்தான் காஞ்சிபுரத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த மாவட்டத்தில் 1,240 தெருக்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் கரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறோம். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து யாரும் வெளியில் வந்து விடாமல் இருக்க நகரில் மட்டுமே 260 சுகாதாரப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்களைக் கண்காணித்து வருகிறாா்கள்.

மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விரைவில் காஞ்சிபுரம் கரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுகக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

ஆட்சியரின் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் பூமி.முத்துராமலிங்கம், சாா் ஆட்சியா் எஸ்.சரவணன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி, நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி மற்றும் சுகாதார அலுவலா்கள் குமாா், இக்பால், பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com