முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூா் பிடிஓ அலுவலக ஊழியருக்கு கரோனா
By DIN | Published On : 14th July 2020 07:10 AM | Last Updated : 14th July 2020 07:10 AM | அ+அ அ- |

13sbroffice_1307chn_180_1
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் பிடிஓ அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து அலுவலகத்திற்கு திங்கள்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் பணி மேற்பாற்வையாளராக பணியாற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அந்த ஊழியா் கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் விடுப்பில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் அவருக்கு கரோனா இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழணை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.