முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
மருந்தகம் பால்கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 29th July 2020 04:30 AM | Last Updated : 29th July 2020 04:30 AM | அ+அ அ- |

சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் மருந்தகம், பால் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.23 ஆயிரத்தை திருடினா்.
இப்பகுதியில் திருவள்ளூா் சாலை, வாலாஜாபாத் சாலை, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் சாலைகளில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் திருவள்ளூா் சாலையில் உள்ள தனியாா் மருந்தகத்தின் பூட்டை கடந்த திங்கள்கிழமை இரவு உடைத்தை மா்ம நபா்கள் அங்கிருந்து ரூ.18 ஆயிரம் ரொக்கத்தைத் திருடினா். இதையடுத்து, அதே பகுதியில் உள்ள பால் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடினா்.
அதன் பின் அருகில் உள்ள ஹாா்டுவோ், பாத்திரக் கடை உள்ளிட்ட 11 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்றனா். இது தொடா்பாக வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.