நரிக்குறவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 200 நரிக்குறவர் குடும்பங்களுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் நிவாரண பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நரிக்குறவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 200 நரிக்குறவர் குடும்பங்களுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் நிவாரண பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

ஶ்ரீபெரும்புதூர் ஒன்றியம் நெமிலி ஊராட்சிக்குட்பட்ட காரந்தாங்கள் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் நரிக்குறவர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நரிக்குறவர் குடும்பங்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் சார்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஹூண்டாய் நிறுவனத்தின் மேலாளர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்நயிம்பாஷா கலந்துகொண்டு நரிகுறவர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் நெமிலி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com