காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் வாகனங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் வாகனங்கள்

ஆறாம் கட்ட பொதுமுடக்கத்தை முன்னிட்டு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள், மாவட்டத்தின் எல்லைகளில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. 

ஆறாம் கட்ட பொதுமுடக்கத்தை முன்னிட்டு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள், மாவட்டத்தின் எல்லைகளில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. 

அனுமதியில்லாமல் வரும் வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

 கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜூன் 19ம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை ஆறாம் கட்டமாக பொது முடக்கம் போடப்பட்டுள்ளது. 

இந்த பொது முடக்க காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரோனை வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும் பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து மற்ற மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வாகனங்கள் வரமுடியாத அளவிற்கு சோதனைச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் கரசங்கால் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செட்டிப்பேடு பகுதியிலும், குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிறுகளத்தூர் பகுதியிலும், தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வரதராஜபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.  

அனுமதியின்றி வரும் வாகனங்கள் எந்தவிதமான பாரபட்சமின்றி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. அனுமதியுடன் வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இதனால் மேற்குறிப்பிட்ட சோதனைச்சாவடிகளில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. வாகனங்களை சோதனைச்செய்யும் பணியில் காவல்துறையுடன் இணைந்து, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

மேலும் வெள்ளிக்கிழமை முதல் அனுமதியின்றி பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com