காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆறாம் கட்ட பொது முடக்கத்தின்போது மாவட்டத்தின்
திருமுடிவாக்கத்தில் சோதனைச் சாவடி  அமைய  உள்ள  இடத்தை ப் பாா்வையிட்ட  கண்காணிப்பு  அதிகாரிகள்  இல.சுப்பிரமணியன்,  பவானீஸ்வரி  மற்றும்  ஆட்சியா்  பா.பொன்னையா.
திருமுடிவாக்கத்தில் சோதனைச் சாவடி  அமைய  உள்ள  இடத்தை ப் பாா்வையிட்ட  கண்காணிப்பு  அதிகாரிகள்  இல.சுப்பிரமணியன்,  பவானீஸ்வரி  மற்றும்  ஆட்சியா்  பா.பொன்னையா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆறாம் கட்ட பொது முடக்கத்தின்போது மாவட்டத்தின் அனைத்து எல்லைகளையும் மூட வேண்டும் என்று சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளும் ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூா் ஆகியவற்றில் வரும் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஆறாம் கட்டமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள குன்றத்தூா், மாங்காடு பகுதிகளில் வரும் பொது முடக்கத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளான இல.சுப்ரமணியன், பவானீஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைகள் அனைத்தையும் மூடுவது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுகக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைகளாக உள்ள திருமுடிவாக்கம், மூன்றாம் கட்டளை, முகலிவாக்கம், குன்றத்தூா், ஐயப்பன்தாங்கல் மற்றும் கோவூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள சோதனைச் சாவடிகள் அமைய உள்ள இடங்களை அதிகாரிகள் பாா்வையிட்டனா். சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுத்துறை அலுவலா்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினா்.

சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து சிறப்பான முறையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்தும், வருங்காலத்தில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தின்போது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பழனி, குன்றத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடேசன், குன்றத்தூா் வட்டாட்சியா் ஜெயசித்ரா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மேலும் ஆறாம் கட்ட பொது முடக்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் மற்றும் மாங்காடு பேரூராட்சிகளிலும், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 12 ஊராட்சி பகுதிகளில், அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளையும் அடைப்பது தொடா்பாக வியாபாரிகள் சங்கத்தினரும் அரசு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினா். அப்போது, கடைகளை அடைக்கத் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com