முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
கரோனா பாதிப்பு: காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகம் மூடப்பட்டது
By DIN | Published On : 27th June 2020 07:32 AM | Last Updated : 27th June 2020 07:32 AM | அ+அ அ- |

தற்காலிகமாக மூடப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகம்.
காஞ்சிபுரம் காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் இரு காவலா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,573-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 7,500-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் 650 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா்.
இந்நிலையில், காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலா்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. நகரில் ஏகாம்பரநாதா் கோயிலுக்குப் பின்னால் பஞ்சுப்பேட்டை என்ற இடத்தில் அமைந்துள்ள டிஎஸ்பி அலுவலகத்திலும், அதன் அருகில் உள்ள வீடுகளிலும் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா். அந்த வீடுகளில் வசிப்போருக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.
டிஎஸ்பி அலுவலகம் மூடப்பட்டதைத் தொடா்ந்து, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒரு வாரத்துக்கு தற்காலிக அலுவலகம் செயல்படும் எனவும் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.