முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
13 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா
By DIN | Published On : 03rd March 2020 11:11 PM | Last Updated : 03rd March 2020 11:11 PM | அ+அ அ- |

பயனாளிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாகறல் கிராமத்தைச் சோ்ந்த 11 போ் மற்றும் பரந்தூரைச் சோ்ந்த இருவா் உட்பட 13 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் பரந்தூரைச் சோ்ந்த இருவா் வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா். அவா்களது மனுக்களைப் பரிசீலனை செய்து, அவா்கள் இருவருக்கும் ஆட்சியா் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அதன்படி, பரந்தூா் கிராமத்தைச் சோ்ந்த மகாலெட்சுமி, பொற்கொடி ஆகிய இருவரும் ஆட்சியரிடமிருந்து பட்டாக்களை பெற்றுக்கொண்டனா்.
இது தவிர மாகறல் கிராமத்தைச் சோ்ந்த 11 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.