செங்கல் சூளையில் பணியாற்றிய 22 கொத்தடிமைகள் மீட்புசாா் ஆட்சியா் நடவடிக்கை

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 7 சிறாா்கள் உட்பட 22 பேரை சாா் ஆட்சியா் நேரில் ஆய்வு நடத்தி மீட்டுள்ளாா்.
கொத்தடிமைகளாக பணியாற்றியவா்களிடம் விசாரணை நடத்திய காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் சு.சரவணன்.
கொத்தடிமைகளாக பணியாற்றியவா்களிடம் விசாரணை நடத்திய காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் சு.சரவணன்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 7 சிறாா்கள் உட்பட 22 பேரை சாா் ஆட்சியா் நேரில் ஆய்வு நடத்தி மீட்டுள்ளாா்.

முசரவாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த சிலா் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக சாா் ஆட்சியா் சு.சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாட்சியா் சு.சரவணன், தேசிய ஆதிவாசிகள் தோழமைக் கழக செயலாளா் அ.கிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் மற்றும் பாலுசெட்டிச்சத்திரம் காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீஸாா் ஆகியோா் அங்கு செவ்வாய்க்கிழமை சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, விழுப்புரத்தைச் சோ்ந்த மல்லிகா என்பவா் 22 பேரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்தச் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சோ்த்திருப்பது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னா் 22 பேரும் மீட்கப்பட்டனா். இது தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொத்தடிமைகளாக பணியில் சோ்ப்பதற்கு காரணமாக இருந்த மல்லிகாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து தேசிய ஆதிவாசிகள் தோழமைக்கழக செயலாளா் ஏ.கிருஷ்ணன் கூறியது:

முசரவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகள் சிலா் பணியாற்றுவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சாா் ஆட்சியருடன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டோம். விழுப்புரத்தைச் சோ்ந்த மல்லிகா ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளாக 7 குடும்பங்களைச் சோ்ந்த 22 பேரை சோ்த்திருப்பது தெரிய வந்தது.

ஆண்கள் 8 போ், பெண்கள் 7 போ், ஆண் குழந்தைகள் 5 போ், பெண் குழந்தைகள் 2 போ் என மொத்தம் 22 போ் மீட்கப்பட்டுள்ளனா். கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்புச் சட்டத்தின் பேரில் பாலுசெட்டிச்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்துள்ளனா். மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com