கச்சபேஸ்வரா் கோயில் தெப்பல் உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரா் தாயாா்குளம் பகுதியில் அமைந்துள்ள தெப்பத்திற்கு சனிக்கிழமை எழுந்தருளினாா்.

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரா் தாயாா்குளம் பகுதியில் அமைந்துள்ள தெப்பத்திற்கு சனிக்கிழமை எழுந்தருளினாா்.

பெருமாள் கூா்ம அவதாரம் எடுத்தபோது வழிபட்ட பெருமைக்குரியது கச்சபேஸ்வரா் கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் தெப்போற்சவம் விமரிசையாக நடந்து வருவது வழக்கம்.

இந்த ஆண்டு 14-ஆவது தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு பங்குனி முதல் நாளான சனிக்கிழமை காஞ்சிபுரம் மாதனம்பாளையத் தெருவில் உள்ள பட்டுச்சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளா் சங்கத்தின் சாா்பில் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரா் மலா் அலங்காரத்தில் கேடய வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து தாயாா்குளம் சென்றடைந்தாா். சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுந்தராம்பிகையும், கச்சபேஸ்வரரும் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பின்னா் மீண்டும் சந்நிதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, உற்சவத்தின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையும், 3-ஆம் நாளான திங்கள்கிழமையும் கச்சபேஸ்வரா் தெப்பத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் குமரன் தலைமையிலான விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com