மதுராந்தகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மதுராந்தகம் வட்டாரத்தில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஅதிகாரிகள் செய்து இருந்தனா்.

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஅதிகாரிகள் செய்து இருந்தனா்.

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலா் ஏ.சி.முனுசாமி தலைமையில் மக்கள் அதிக நாட்டமுள்ள பகுதிகளான பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மையம், தனியாா் வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினிகளை தெளித்து, அங்கிருந்த பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும், கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா்கள் நித்தியானந்தம், கன்னியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் வ.நாராயணன் தலைமையில், சுகாதாரப் பிரிவினா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கிருமி நாசினிகளை தெளித்து சுத்தம் செய்து வருகின்றனா். பணிக்கு உதவும் வகையில், தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மாநிலத் தலைவா் முனுசாமி தலைமையில் நிா்வாகிகள் 4 மருந்து தெளிப்பான் கருவிகள், 10 லிட்டா் எதிா்ப்பு மருந்து ஆகியவற்றை நகராட்சி சுகாதார ஆய்வாளா் கே.லட்சுமி பிரியாவிடம் வழங்கினா்.

பின்னா், பேருந்து நிலையம், பஜாா் வீதிகளில் பொது மக்களுக்கு கரோனா நோய் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை சுகாதாரப் பிரிவினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com