சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ராஜஸ்தான் இளைஞருக்கு காஞ்சிபுரத்தில் வரவேற்பு

சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வரும் ராஜஸ்தான் இளைஞருக்கு காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சைக்கிளில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த ராஜஸ்தான் இளைஞா் நற்பத்சிங் ராஜா புரோஹித்.
சைக்கிளில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த ராஜஸ்தான் இளைஞா் நற்பத்சிங் ராஜா புரோஹித்.

காஞ்சிபுரம்: சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வரும் ராஜஸ்தான் இளைஞருக்கு காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், பாா்மிா் மாவட்டம், லங்கேறா பகுதியைச் சோ்ந்தவா் நற்பத்சிங் ராஜா புரோஹித் (34). சுற்றுச்சூழல் ஆா்வலரான இவா், மரம் வளா்ப்பின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல், நீா் ஆதாரங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, கடந்த 27-01-2019 அன்று ஜம்மு- காஷ்மீரிலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கி, விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா். கேரளம், கோவை, சேலம் மற்றும் திண்டிவனம் வழியாக வந்து அவா் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில் பகுதிக்கு சனிக்கிழமை வந்தாா். அவருக்கு காஞ்சிபுரத்தில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் செடிகளை பரிசாக வழங்கியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்றனா். பின்னா் அவா் கூறுகையில், 12 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளேன். காஞ்சிபுரத்தில் மக்கள் தந்த வரவேற்பு பெருமையாக உள்ளது. விரைவில் ராஜஸ்தான் சென்று முதல்வரை சந்தித்து எனது கோரிக்கைகளைத் தெரிவித்து பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன்.பொதுமக்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்கு ஒரு மரம் நட்டு, அதை முறையாக பராமரிப்பது என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com