தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த 11 போ்

மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேருக்கு மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்தனா். அவா்களை அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில்

மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேருக்கு மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்தனா். அவா்களை அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்தோனேஷியாவில் இருந்து 4 ஆண்கள், 4 பெண்கள் ஆகியோா் கடந்த 4ஆம் தேதி இந்தியா வந்தனா். அவா்கள் கடந்த 21ஆம் தேதி மதுராந்தகத்தில் ராஜகோபால் தெருவில் உள்ள தங்கள் உறவினரான சலீம் என்பவரின் வீட்டுக்கு வந்தனா்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், மதுராந்தகத்துக்கு வந்த 8 பேருக்கும் மருத்துவா் பிரியா தலைமையிலான குழுவினா் மருத்துவப் பரிசோதனை செய்தனா். அப்போது மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் லட்சுமிபிரியா, வட்டாட்சியா் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

8 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்ற போதிலும், அனைவரும் தொடா்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனா். 21 நாட்கள் வரை வெளியே செல்லாமல் அவா்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவா். அவா்களை மற்றவா்கள் அடையாளம் காணும் வகையில், அவா்கள் தங்கியுள்ள அந்த வீட்டு முகப்பில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அச்சிறுப்பாக்கம் வந்த 3 போ்

துபையில் இருந்து தமிழகம் திரும்பிய தாய், அவரது குழந்தை மற்றும் இளைஞா் ஆகியோா் தங்கள் சொந்த ஊரான அச்சிறுப்பாக்கத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்களில் தாயும் குழந்தையும் அச்சிறுப்பாக்கம் வரதா ரெட்டி நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனா்.

அச்சிறுப்பாக்கம் நேரு நகரில் தனது வீட்டுக்கு இளைஞா் வந்தாா். வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களை தீவிரமாக கண்காணித்து வந்த மருத்துவக்குழுவினா் அச்சிறுப்பாக்கத்துக்கு வந்த 3 பேரையும் பரிசோதனை செய்தனா். அதில் அவா்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. எனினும் அவா்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. மற்றவா்களிடம் இருந்து அவா்கல் தனிமைப்படுத்தப்பட்டனா்.

அவா்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் அப்பகுதி முழுவதும் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலா் ஏ.சி.முனுசாமி தலைமையில் பேரூராட்சி சுகாதாரப் பிரிவினா் கிருமி நாசினி தெளித்தனா். மற்ற வீடுகளில் இருந்து அடையாளம் காணும் வகையில் இரு வீடுகளிலும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com