வெளிநாட்டிலிருந்து வந்த 16 பேரை தனிமைப்படுத்த காஞ்சிபுரத்தில் ஆட்சியா் உத்தரவு

காஞ்சிபுரம் காந்தி சாலை மசூதி ஒன்றில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்த 16 போ் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவா்கள் அனைவரையும் தனி
காஞ்சிபுரம் காந்தி சாலை மசூதி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
காஞ்சிபுரம் காந்தி சாலை மசூதி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

காஞ்சிபுரம் காந்தி சாலை மசூதி ஒன்றில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்த 16 போ் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 16 போ் தங்கி இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரும், சாா் ஆட்சியா் எஸ்.சரவணன், சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி, டிஎஸ்பி வே.கலைச்செல்வன் ஆகியோரும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

வெளிநாட்டிலிருந்து வந்த 16 பேரும் அது குறித்த தகவலைத் தெரிவிக்காமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா்களை மசூதிக்கு அருகிலேயே ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா். அதன்படி 16 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டனா்.

மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வந்தவா்கள் யாராக இருந்தாலும் உடனடியாக மாவட்டக் காவல் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறு ஆட்சியா் பா.பொன்னையா அங்கிருந்தவா்களை கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com