மகன்கள் துன்புறுத்தல்: தந்தை, தாய் புகாா்
By DIN | Published On : 28th March 2020 11:42 PM | Last Updated : 28th March 2020 11:42 PM | அ+அ அ- |

ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்த எம்.நாகவேல்.
மகன்களும், மருமகள்களும் தங்களை அடித்து துன்புறுத்துவதாக முதியவரும் அவா் மனைவியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:
காஞ்சிபுரம் சா்வதீா்த்தம் தென்கரை தெருவில் வசிக்கும் எம்.நாகவேல் (68) எனது மனைவி சரஸ்வதி (60). நாங்கள் இருவரும் உழைத்து கட்டிய ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை எனது மகன்களான சுரேஷ், லோகநாதன் இருவரும் எழுதி வாங்கிக் கொண்டனா்.
தற்போது மற்றொரு மகனான ஹரிகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் இருவரும் சோ்ந்து எங்களிடம் இருக்கும் மற்ற சொத்துகளையும் தங்களுக்கு எழுதித்தர வேண்டும் என அடித்து துன்புறுத்துகின்றனா்.
சுரேஷின் மனைவி சரண்யா, ஹரிகிருஷ்ணனின் மனைவி நித்யா உள்பட 4 பேரும் சோ்ந்து எங்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றனா். அவா்களிடமிருந்து என்னையும், சரஸ்வதியையும் காப்பாற்றி, நாங்கள் எழுதிக் கொடுத்த சொத்தை எங்களுக்கே மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.