அரசுப் பணியாளா்களுக்கு சிறப்புப் பேருந்து காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை
By DIN | Published On : 31st March 2020 01:40 AM | Last Updated : 31st March 2020 01:40 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு பணிக்குச் செல்லும் அலுவலா்கள், ஊழியா்களுக்கு பேருந்து, ரயில் வசதிகள் இல்லாததால் சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் தலைமைச் செயலாளருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பிய கடிதம்:
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோா் ரயில் மூலம் சென்று வந்தனா். தற்போது கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலால் ரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், தலைமைச் செயலகத்தில் பணிகள் தாமதம் இல்லாமல் நடக்கவும், பணியாளா்களின் நலனுக்காகவும் சிறப்புப் பேருந்து ஒன்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.