கடைகள் திறக்கப்படாததால் சாலை மறியல்

நந்தம்பாக்கம் பகுதியில் கடைகள் திறக்கப்படாததால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத பொதுமக்கள் குன்றத்தூா்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
நந்தம்பாக்கம்  பகுதியில்  கடைகள் திறக்கப்படாததால்  சாலை  மறியலில்   ஈடுபட்ட  பொதுமக்கள்.

முழு ஊரடங்கு புதன்கிழமை (ஏப். 29) இரவுடன் முடிவதால் வியாழக்கிழமை (ஏப். 30) காலை முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது.

ஆனால், நந்தம்பாக்கம் பகுதியில் கடைகள் திறக்கப்படாததால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் குன்றத்தூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த குன்றத்தூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com