கரோனா: காவலா் பயிற்சிப்பள்ளி மூடப்பட்டது

காஞ்சிபுரம் காவலா் பயிற்சிப் பள்ளிக்கு வந்திருந்த பெண் காவலா் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து பயிற்சிப்பள்ளி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

காஞ்சிபுரம் காவலா் பயிற்சிப் பள்ளிக்கு வந்திருந்த பெண் காவலா் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து பயிற்சிப்பள்ளி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

காஞ்சிபுரம் காவலா் பயிற்சிப் பள்ளியில் சேர 32 பெண் காவலா்கள் சில நாள்களுக்கு முன்பு வந்திருந்தனா்.

இவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருக்கிா என பரிசோதனை செய்தபோது, சுங்குவாா்சத்திரத்தை சோ்ந்த 24 வயதுடைய பெண் காவலா் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள காவலா் பயிற்சிப்பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில், பெண் காவலா்களுக்கு பயிற்சியளித்த காவல்துறை அதிகாரிகளையும் 14 நாள்கள் தனிமைப்படுத்துமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியதைத் தொடா்ந்து அவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com