ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி கோரி காஞ்சிபுரத்தில் பட்டு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் 

ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி கோரி காஞ்சிபுரத்தில் பட்டு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் 

காஞ்சிபுரம், பட்டு நெசவாளர்கள் கரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதரம் கேள்விக்குறியாகவும், மத்திய மாநில அரசுகள் ரூ5000 சிறப்பு நிவாரண நிதியாக நெசவாளர்களுக்கு அளிக்க கோரி

காஞ்சிபுரம், பட்டு நெசவாளர்கள் கரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதரம் கேள்விக்குறியாகவும், மத்திய மாநில அரசுகள் ரூ5000 சிறப்பு நிவாரண நிதியாக நெசவாளர்களுக்கு அளிக்க கோரி குடும்பத்தினருடன் நெசவு தளவாடங்கள் வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு விதிக்கபட்டது. சென்னை கோயம்பேடு மார்கெட் பகுதியில் பணிபுரிந்து வந்த கூலி தொழிலாளர்கள் பலர் வீடு திரும்பியதால் நோய் தொற்று அதிகரித்தால் ஊரடங்கு கடுமையாக்கபட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் பலர் தங்கள் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

குறிப்பாக காஞ்சிபுரத்தஇன் பிரதான தொழிலாக விளங்கும் நெசவு தொழிலை பலர் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும், பலர் தனியாரிடமும் நெய்து வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களிடமிருந்து நெய்து முடித்த சேலையை பெற்று கொண்டு முன்கூலியாக ரூ 2000 மற்றும் முண்பணம் 2000 என 4000 வழங்கியும் நிவாரணப்பொருள்களை அளித்த நிலையில், தனியார் உரிமையாளர்கள் ஏதும் வழங்கவில்லை .

இந்நிலையில் அரசு அளித்த நிவாரணம் மற்றும் சிறுசேமிப்பு பணத்தை கொண்டு வாழ்ந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் நெசவளார்களுக்கு சிறப்பு நிவாரண தொகையாக ரூ 5000 வழங்கவேண்டும் என குருவிமலை பகுதி நெசவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் நெசவு தளவாடங்கள் வைத்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com