காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட திங்கள்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு பகுதியைச் சேர்ந்த கரோனா பாதித்த ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இந்த 10 பேரையும் சேர்த்து திங்கள்கிழமை  17 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 14 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர்.
இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 203-ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 40 பேருக்கு கரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 498-ஆக இருந்தது. திங்கள்கிழமை ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 538-ஆக உயர்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் ஒரே நாளில் 
19 பேருக்கு கரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 19 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.
அவர்களில் ஆவடி மாநகராட்சி-1, பூந்தமல்லி நகராட்சி மற்றும் ஒன்றியம்-6, திருநின்றவூர் பேரூராட்சி-2, திருவள்ளூர் நகராட்சி மற்றும் ஒன்றியம் -7, வில்லிவாக்கம் ஒன்றியம்-1, புழல்-1, பள்ளிப்பட்டு ஒன்றியம்-1 ஆகியோர் அடங்குவர். 
இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் 567 பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 472-ஆக உயர்ந்துள்ளது என பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com