காஞ்சிபுரத்தில் இருந்து 1464 தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரயிலில் அனுப்பி வைப்பு

காஞ்சிபுரத்தில் இருந்து 1464 தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரயிலில் அனுப்பி வைப்பு

காஞ்சிபுரத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 1464 தொழிலாளர்கள் வியாழக்கிழமை சிறப்பு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். 

காஞ்சிபுரத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 1464 தொழிலாளர்கள் வியாழக்கிழமை சிறப்பு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். 

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் ஐசிதி என்ற இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 1464  தொழிலாளர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர்.

இவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, எஸ்பி பா. சாமுண்டீஸ்வரி, சார் ஆட்சியர் எஸ். சரவணன், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் ரா. மகேஸ்வரி, பொறியாளர் மகேந்திரன் ஆகியோர் உணவு பொட்டலம், குடிநீர் பிஸ்கட் பாக்கெட்டுகள், மற்றும் ரயிலில் செல்வதற்கான அனுமதி சீட்டு ஆகியனவற்றை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

இவர்கள்1 464 பேருக்கும் ஆதார் அட்டை,கரோனா இல்லை என்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவச் சான்றிதழ் ஆகிய அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சிறப்பு ரயில் வரும் 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் சென்று சேரும் அதுவரை இடையில் உணவும் குடிநீரும் ரயில்வே நிர்வாகம் வழங்கும் எனவும் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com