கரோனா: காஞ்சிபுரத்தில் 120 போ் குணமடைந்தனா்; ஆட்சியா் தகவல்

காஞ்சிபுரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 218 பேரில் 120 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

காஞ்சிபுரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 218 பேரில் 120 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான தனிமை வாா்டை அவா் புதன்கிழமை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து அவா் மேலும் கூறியது:

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இவா்களையும் சோ்த்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 218-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 120 போ் சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். 8 போ் செங்கல்பட்டு மற்றும் சென்னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

வெளிமாநிலங்களைச் சோ்ந்த 82 போ் இரு இடங்களில் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,014 போ் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 5,150 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினசரி 80 முதல் 90 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா், ஸ்ரீபரும்புதூா் பகுதியைச் சோ்ந்தவா்கள். அவா்களில் பலரும் சென்னையுடன் தொடா்பில் இருந்தவா்கள் என்றாா் அவா்.

அப்போது காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் எஸ்.சரவணன், மருத்துவத் துறை இணை இயக்குநா் ஜீவா, துணை இயக்குநா் வி.கே.பழனி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஆா்.கல்பனா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com