காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 ஏரிகள் முழுமையாக சீரமைப்பு: அமைச்சா் பா.பென்ஜமின்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 45 ஏரிகள் ரூ. 9,73 கோடி செலவில் முழுமையாக சீரமைக்கப்பட்டிருப்பதாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 ஏரிகள் முழுமையாக சீரமைப்பு: அமைச்சா் பா.பென்ஜமின்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 45 ஏரிகள் ரூ. 9,73 கோடி செலவில் முழுமையாக சீரமைக்கப்பட்டிருப்பதாக தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள ஆற்பாக்கம் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் குடிமராமத்துப் பணிகளைத் தொடக்கி வைத்துப் பேசியது:

நீா்நிலைகளில் குடிமராமத்துத் திட்டத்துக்கு புத்துயிா் அளிக்க 2017-இல் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கி, காஞ்சிபுரம் அருகே மணிமங்கலம் ஏரியில் விவசாயிகள் முன்னிலையில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக ரூ. 1.63 கோடி மதிப்பில் 22 ஏரிகளும், 2-ஆவது கட்டமாக ரூ. 2.45கோடி மதிப்பில் 12 ஏரிகளும் தூா்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிமராமத்துப் பணிகள் முடிக்கப்பட்டது. 3-ஆவது கட்டமாக ரூ. 5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 11 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் முடிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ. 9.73 கோடி ஒதுக்கப்பட்டு, மொத்தம் 45 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் மூலமாக மட்டும் 8,287.65 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4-ஆவது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ரூ. 1,731.09 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு, 32 ஏரிகளில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் வட்டாரம், ஆற்பாக்கம் கிராமத்தில் இந்நிதியாண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ், ரூ. 75 லட்சம் மதிப்பில் ஏரிக்கரையில் உள்ள முள்செடிகளை அகற்றி பலப்படுத்துதல், மதகுகளில் பழுதுகளை நீக்குதல், கலங்குகளில் பழுதுகளை சீரமைத்தல், வரத்துக் கால்வாயை தூா்வாரி அகலப்படுத்துதல் போன்ற பணிகளை பருவமழை காலத்துக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப் பிரிவின் செயற்பொறியாளா் பொதுப்பணித்திலகம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் வீ.சோமசுந்தரம், காஞ்சி பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com